Pages

Tuesday, January 18, 2011

story 1 : computer manithargal

                         

கம்ப்யூட்டர்     மனிதர்கள்   
 சிறு கதை - என். நவ சதீஷ் குமார் 




ஸ்சில் கூட்டம்  அதிகம் , அதிகாலை எழுந்து பர பரபரப்பான சென்னை சாலைகளில் வரவேண்டும் , பெட்ரோல் விலை பயமுறுத்துவதால்
டூ வீலரில் பயணம்  செய்வது கையை கடிக்கும் ஆகவே சுமையை இருந்தாலும் இந்த பஸ் பயணம் சுகம் தான் . அரசு பணம் பெட்ரோல் பத்தி எல்லாம் கவலை படாது , எனவே கட்டணம் இந்த பட்ஜெட்டில்லும் ஏறாது மாறாக மின்சார கட்டணம் , காய்-கறி விலை எல்லாம் கூட்டி நமக்கு தெரியாமல் பர்ஸ் காலி என்பது
கண்டக்ட்டர் வரும் வரை நமக்கு உரைக்கவில்லை .அட ..சொகுசு பேருந்து 
ஜன்னல் சீட் கிடைத்து விட்டது
    
  ஜிலென்று காற்று வீசியது மனதில் ஏறியிருந்த புழுக்கம் மெல்ல அவிழ்ந்தது . ஆம் ..நான் அலுவலகத்தில் சீனியர் உதவியாளர் ..யார் தப்பு செய்தாலும் பொறுப்பை சுமக்கும் படு ஆபத்தான பதவி ..சம்பளம் ...சொற்பம் ..அரசு ஊழியர்களுக்கு சலுகை , பஞ்ச படி , போனஸ் எல்லாம் இருக்கின்றது, எங்களுக்கு எல்லாம்  கனவு மாயம் , அவர்கள் வெங்காயம் வாங்கி சாப்பிட்டால் நாம் குப்பைமேனி கீரையை சாப்பிட வேண்டும் , உடம்புக்கு நல்லது என்று ஆறுதல் படுத்தி புளித்த தயிர் சாதம் ...அதற்க்கு பெயர் லஞ்ச ..திறந்தால் குப் என்று ஒரு வாடை ரூம் முழுக்க இதுதான் 
எங்களை போன்ற தனியார் கம்பனி ஊழியர்களின் டிசென்ட் லஞ்சின் நிலை ! 


அதிகாரிகள் இப்போதெல்லாம் mba  படித்து விட்டு லேப்டாப் சகிதமாய் வருகின்றார்கள் 
1000௦௦௦-120௦ என்றால் உடனே எச்செல் சீட்டை திறந்து கணக்கு போட்டு பார்கின்றார்கள் நான் தரும் கால்குலேட்டர் கணக்கு தப்பாகுமாம்!  சாம் நவீன் ceo  
முன்பெல்லாம் ராஜரத்தினம் பிள்ளை , நடேசன் முதலியார் , வையாபுரி செட்டியார் 
 இப்படி தான் முதலாளிகள் பெயர் இருக்கும் காலம் கலி காலம் இளவட்டங்கள் பெயரிலும் மாற்றங்கள் ..


"சார்.. சார்" - கதவை பவ்யமாக திறக்க வேண்டும் ..முக்கால் வாசி மண்டை , அரை வாசி தொப்பை தெரிய "வரலாமா சார் " அடக்கமாய் கேட்க்க வேண்டும் "எஸ் கம் inn ". 
பதில்  சொல்லும் சாம் நவீன் . பைலை நீட்ட வேண்டும் ..நம் கண் முன்னே கம , கமக்கும்
சாக்லேட் காபி குடித்த படி " i  think you did   a
   பிக் மிஸ்டேக் " -எனக்கு ஈர குலை நடுங்கும் ...ஜாப் ல கவனம் இல்ல ...நல்லா பாருங்க இங்க தப்பு , அங்க தப்பு ..இங்கிலீஷ் சரியா தெரியல்ல ... ஒரு லெட்டர்ல இத்தனை தப்பு இருந்தா அர்த்தம் புரியுமா?.. ஆமா ..நாங்க படிகிறப்ப ஹிந்தி , இங்கிலீஷ் படிச்சா பெரிய பாவம் , தமிழ் வளர்ப்போம் , தாய் மொழி படிங்கன்னு சொன்னாங்க..தப்பு தான் ராசா ..இப்ப உங்க காலம் நல்ல வேலை அக்கௌன்ட் ல இருபதாயிரம் குறையுது ... ஆங்கிலம் கணக்கை காப்பாதிருச்சு!.
மிஸ்டர் ..இதுக்கும் கம்ப்யூட்டர் இருக்கு ...உங்க வேலைக்கு இது போதும் ..அலட்சியம் 
ஒரு இயந்திரத்தின் முன் ஏன் திறமை ஒப்பீடு ,நான் மனிதன் , சுகர் , பிரசர் , குழந்தை , குட்டி ,வெங்காயத்திற்கு பதில் வெள்ளை புடு   போடலமா ,முருங்கைக்காய் 10  ரூவா ..இட்லி பொடி கிடையாதுங்க ...மனைவியின் தினசரி பட்டி மன்றம் , எனது பட்ஜெட் தீர்ப்பு .. இன்வேர்ட்டர் இல்லாம வேக்காடா இருக்குங்க ...யோவ் நவீன் ...நீ ..உங்கப்பா சொத்துள்ள படிச்ச, வளர்ந்த ..நாங்க அடிமட்டம்பா ...நீ கம்ப்யூட்டர் ல அடிசால்லும் வாங்குவோம் ... அடி ஸ்கேல் ல அடிச்சாலும்  தாங்கனும் ..விதியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே ...பாட்டு கூட சோகம் தான் . 
ஒரு நாள் ஒரு யுகம் ...ஜவுளி கடை வேலை ..சின்ன முதலாளி , பெரியவர் கணக்கை முடித்து , கல்லா சாவி யை கொடுத்து விட்டு தாம்பரம் பஸ் நிலையம் நோக்கி நடந்தேன் .சென்னை சாலைகளில் பத்து மணி, இரவில் ட்ராபிக் இல்லை ... பஸ் வேகமாய் சென்று கொண்டிருந்தது .. சடன் பிரேக் , குலுங்கிய சீட்டில் , ஐயோ ..அம்மா ..பயணிகளின் அலறல் சத்தம் ...எதிரில் பார்க்க ... புத்தம் புதிய ஆடி கம்பனியின் கார் தலை குப்புற கிடந்தது . 108  ஆம்புலன்ஸ் வருவதற்குள் மிக சாதாரண மனிதர்கள் ஓடி வந்தார்கள் ..நானும் இறங்கினேன் .....அட ...என் ஈர குலையை காலையில் புடுங்க முயன்ற 
சாம் நவீன் ..எனது சின்ன முதலாளி ...நிறைய இரத்தம் வழிய சுய நினைவு இல்லை ..
அரக்க பறக்க பக்கத்தில் நின்ற ட்ராபிக் போலிஷிடம்  அனுமதி பெற்று கொண்டு 
அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்றேன். 
    இரண்டு நாள் சென்று  இருக்கும் சின்ன முதலாளி அவசரமாக மருத்துவ மனைக்கு 
கூப்பிடுவதாக செல் வந்தது . மருத்துவ மனையின் வசதி படைத்த அறை, துன்பங்கள் இருந்தாலும், பணக்காரர்களுக்கு அதிலும் சுகம் ..ஏக்கம் என்னுள் ..
"வாங்க ... வேலு சார் ....உங்களுக்கு ரொம்ப நன்றி சார் ... எனக்கு கொஞ்சம் காலில் அடி, முகத்தில் கீறல் , ஹார்ட் தப்பிதிருச்சு ... மூளைக்கு இரத்தம் கொஞ்சம் ஸ்டாப் ஆயிருந்தா கோமா தான் ... ஆல் கிரடிட் உங்களுக்கு தான் சார் ... மனிதன் உணர்ச்சி வசப்படும் போது கண்ணீர் வருகின்றது , கடவுள் நம்பிக்கை வருகின்றது , தான் என்ற அகம்பாவம் உடைந்து போய்விடுகின்றது . சல்யூட் அடிக்க "'ம்ம்ம்" என்று தலை தூக்காமல் நடக்கும் சாம் நவீன் இப்போது கை குப்பி வணக்கம் வைக்கின்றான் .
".சார் ..மெல்ல ஆரம்பித்தேன் ...சொல்லுங்க வேலு  ... டென் தவுசண்ட் ருபீஸ் செக்போட சொல்லியிருக்கேன் ..ப்ளீஸ் ..அக்சப்ட் பண்ணிக்கங்க .." மனிதாபிமானம் பணத்தால் விலை நிர்ணயம் செய்தது . சார் ..எனக்கு பணம் அவசியம் தான் இல்லைன்னு சொல்லலே ..இப்ப நான் செய்தது ஆபீஸ் வேலை இல்ல ...சன்மானம் தேவை இல்லை .. சார் ..கம்ப்யுட்டர் படு வேகமா வேலை செய்யும் , உங்க ப்ரோக்ராம்மே அது சரியா செய்யும் ... ஆனா மத்தவங்கள மதிச்சா தான் நிர்வாகமே நல்லா நடக்கும் .
லேப்டாப் மடில இருக்கும் மார்புக்கு பிரச்சனை வந்தா நெஞ்சை தடவாது .
கம்ப்புட்டர் கட் பண்ணும் , பேஸ்ட் பண்ணும் , உறவுகளை ஓட்ட நெட்வொர்க் போடாது .
உங்க அப்பா காலத்துல நாங்க மனுசனா மதிகப்பட்டோம் , பணத்தை விட அவங்களுக்கு தொழிலாளி மேல விசுவாசம் அதிகம் , நீங்க ஒரு மெசினை வச்சிகிட்டு தினமும் மிரட்டிட்டு இருக்கீங்க... வேலைக்கு உத்திரவாதம் இல்லைன்னு நீங்க சொல்ல , சொல்ல பயத்துல குனி , குறுகி உங்க முன்னாடி அடிமையாய் நிற்கிறோம் , சார் , கம்ப்யூட்டர் 
வியாபாரத்தை வளர்க்கும் , அனால் உங்க மனசு மட்டும் தான் எங்களை தக்க வைக்கும் ,
வளர்ந்த வியாபாரம் தலைகனும்னா எங்க மனசை பாருங்க ..ப்ளீஸ் சார் " - என்று 
சொல்லிவிட்டு விடை பெற, மெல்ல ஒரு எலெக்ட்ரானிக் மனசு மனித அவயங்களோடு 
உருமாறி கொண்டிருக்கும் அழகை கண்கள் காட்ட பாரம் இறக்கிய நிம்மதியில் அலுவலகம் நோக்கி நடக்க துவங்கினேன் .
                                     -------முற்றும் -------


மதுரை . -என். நவசதிஷ்குமார்
16 ரயிள்ளார் நகர் முதல் தெரு
மதுரை -18 

பிற்குறிப்பு :-
அன்புள்ள வாசக பெருமக்களே ..உங்களுக்கு எனது ப்ளாக் பிடித்திருந்தால் உங்களது ஊடகங்களில் பயன் படுத்தி கொள்ளுங்கள். ஒலி, ஓளி காட்சிகள் ஆகவும் பதிவு செய்யல்லாம் . அதற்க்கான கட்டணம் உங்கள் விருப்பம் அதனை  
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 
கூடல் நகர் கிளை 
sb     அக்கௌன்ட் நம்பர் : 312      மூலம் ஆண் லைனில் செலுத்தலாம் .

  

  For advertisers can post ads 
11.5 * 16 cms for 3 months 3000 rupees only


send your design thru navasathish@gmail.com
for posting your ads