Pages

Saturday, February 5, 2011

venkittamma-short story



வேங்கிட்டம்மா 

வேங்கிட்டம்மா ... என் வீட்டு மாடியில் வாடகைக்கு இருக்கும் ஒரு  நச்சு ...ஒரே 
பையன், பேரு வெங்கடேஸ்வரன் ...எட்டு வயசு ...மாடியில் ஓடுவதும் , ஆடுவதும் ..என்னால் சகித்து கொள்ள முடியவில்லை இதில் . 
"மாமி..கொஞ்சம் சீனி கிடைக்கும்மா ?'-சரியாக ஒரு சின்ன டம்ளரில் அளவுக்கு கடன் கேட்பாள்... திருப்பி தரும்போது அதே டம்ளரில் அளவை குறைத்து கொடுப்பாள் ! ச்சே ...என்னத்தை சொல்ல ...இல்லை வேங்கிட்டம்மா ...வாய் வரை வரும் சொல்ல ,இருந்தாலும் கோபத்தை அடக்கி கொண்டு ..சீனி கொடுத்து விடுவேன் .


வேங்கிட்டம்மா வின்  ..அண்ணன்  மிலிடரி மென் ...பார்க்க கம்பீரம் என்று சொல்ல மாட்டேன் .ஆனால் ஒரு வீரதிற்குள் நல்ல அடக்கம் இருக்கும் ...மாமி.....நமஸ்காரம் ...என் தங்கச்சி லக்ஷ்மியை பார்த்துகங்க ...காதல் கல்யாணம் பண்ணினது அப்பாக்கு பிடிக்கலை ,நாங்க educated family ..இவ புருஷன் நல்லவன் தான் யாரும் ஆதரவு தரமாட்டேன்கறாங்க  ...பிழைக்க ரொம்ப கஷ்டப்படறான் மாமி ,..சம்பாதிக்க கேரளாவுக்கு ,போய் , கிராநைட் வெட்டி எடுக்கும் வேலை . தங்குமிடம் கூடாரம் ,.
கூடாரத்தில் என் தங்கச்சியை பார்க்க என் மனசு கேட்கவில்லை மாமி ..அவன் வரப்ப வரட்டும் ...வாடகை என் பொறுப்பு ..இந்தாங்க 11 மாச அக்ரிமென்ட் , 5 மாச அட்வான்ஸ் 
பேச்சு மாறாமல் மாதா , மாதம் பணம் என் அக்கவுண்டிற்கு கிரெடிட் ஆகி விடும் .


..மாமி ... எங்க மிலிடரி கேண்டீன்ல எல்லாமே விலை குறைவு மாமி ...நீங்க கேட்ட டிவி 4000 கம்மி,  மாமி ...நான் ஆர்டர் கொடுத்திர்றேன் ...அவன் தயவில் புதிய LED tv என் பெண்ணிற்கு வாங்கி கொடுத்து மருமகனின் மதிப்பை காப்பாற்றி கொண்டேன் . எல்லாம் விதி ... வேங்கிட்டம்மாவின் மிகப்பெரிய சப்போர்ட் அவள்  அண்ணன், ஒரு நாள்  மும்பை தாஜ் ஹோட்டல் அட்டாக் நடந்த பொழுது  ஹெலிகாப்டரில் இருந்து பாரசூட் வழி ஹோட்டலில் புகுந்தது தான் தெரியும் ...பிறகு வந்தது அவன் உருக்குலைந்த பிணம் மட்டுமே ! ௦௦௦  


வாழ்கையில் பிடிப்பில்லாமல் அழுது கிட்டத்தட்ட பைத்தியம் ஆகிவிடுபவளை ஆறுதல் சொல்ல நான் மட்டுமே ..கல் உடைத்த சிற்ரைப்புகள் , கொஞ்சம் பணம், மாதத்தில் ஒரு நாள் மனைவியை சந்திக்க வருவான் வெங்கிட்டு அப்பா ! சில சமயம் அவனை கண்டால்
எனக்கு கோவம் பொத்துகொண்டு வரும் .இஞ்சி கொஞ்சம் , வெள்ளை பூண்டு நாலு , 
தேவை பட்டால் தக்காளி எல்லாம் கடன் .....நாங்க என்னப்பா மளிகை கடையா 
நடத்துறோம்,இதில் மாமி வாடகை ஒரு வாரத்தில தரேன் என்று இழுத்தடிப்பு வேறு , என் மகள் "இன்னும் ஏனம்மா அந்த வாலு பையனையும், வக்கத்த புருசனையும் ,அழுவாச்சி 
பொம்பளையையும்...காலி பண்ண சொல்ல மாடேங்கேரே..இவருக்கு சென்னை தவிர ஹைதரா பாத் தான் transfer ..நல்ல குடித்தனமா வைக்க பாருங்கம்மா ..இல்ல நான் நல்லா   
அந்த  வெங்கிட்டு அம்மாவை நாக்க புடுங்கிற மாதிரி கேட்கட்டுமா?" -எனக்கு நிர்பந்தம் 
பலவிதம் .சரி ..இன்னைக்கு ..முடிவா சொல்ல வேண்டியது தான் ... எப்படி சொல்லுவது ...ஒரே குழப்பம் ....கொஞ்சம் ஆயாசமாய் சோபாவில் அமர ,..நீண்டநாளாய் இருந்த வலி திடிரென்று .இடுப்பில் சுருகென்று ஆரம்பித்து வலிக்க துவங்கியது  ...பிறகு மெல்ல பரவ,பரவ  ஐயோ ..அம்மா ... அலறல் என்னை அறியாமல் ... ஓடி வந்தாள் வேங்கிட்டம்மா ..மாமி...மாமி ... 108 ஆம்புலன்ஸ் சைரன் சப்தம் ..அருகில் வேங்கிட்டம்மா ...மயக்கத்திலும் அவள் படபடப்பை என்னால் பார்க்க முடிந்தது . 
                     " யாருமா நீங்க "--டாக்டர் கேட்பதும்...இல்லைம்மா இவங்களுக்கு ஒரு கிட்னி யாரவது கொடுத்தாதான் காப்பாத்த முடியும் ...இவங்க மக கிட்ட பேசியாச்சு ...husband  hydreabad  இல் இருக்காராம் , கன்சல் பண்ணிட்டு flight  பிடிச்சு வரங்கலாம்..என்க்கு இது urgent  கேஸ் , வயசானவங்க வேற , கிட்னி donate  பண்ணுறவங்களை தேடிட்டு 
இருக்கோம் ,விளம்பரம் கொடுத்தாச்சு ..இன்னும் யாரும் வரலை ...அவங்க மகள் வர வரைக்கும் நீங்க இருங்க..நர்ஸ் ...வாங்க ஊசி , மருந்து , மாத்திரை எல்லாம் எழுதி கொடுத்தார் .
"டாக்டர் சார் ...ஒரு நிமிஷம் சார், இவங்க எனக்கும் அம்மா மாதிரி தான் சார் ... எனக்கு  அரைகுறை மயக்கம் இருந்தாலும் வேங்கட்டம்மா வின் குரல் எனக்கு கேட்டது ...சார் ..healthy body இருக்கறவங்க கிட்னி donate பண்ணலாம்னு கேள்வி பட்டு இருக்கேன் ...எனக்கு இல்லாதப்ப இந்த அம்மா, அன்ன தானம் மாதிரி கேட்கறப்ப எல்லாம் கடனா கொடுத்திருக்காங்க ..அந்த கடன் இந்த உடம்புல இருக்கிதால..அம்மாவுக்கு நான் கிட்னி தரேன் டாக்டர் ... "- பக்கத்தில் அழுக்கு கணவன் ஆமோதிப்பதும் தெரிய வர ..மயக்கத்திலும் என் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது.

அகற்றிய கிட்னி எனக்கு பொருத்தப்பட்டது ,யாரை நான் விரோதியாய் விரட்ட நினைத்தேனோ , அவள் இப்போது என் உயிர் காத்த கடவுள் , பாலும் ,தெளி தேனும்  , ,பாகும் , பருப்பும் இவை நான்கும் கலந்து...நான் தினமும் பாடும் பாடலின் வரிகள், வெள்ளிகிழமை சாம்பார் அதை மறக்காமல் காக்கைக்கு வைத்து உண்ணுவது என் குணம் , இது போலி தானே .. வேங்கட்டம்மா என்ன கேட்டாள்? இந்த உதவியை தானே ..?உண்டியலில் பணம் சேர்கின்றேன் கடவுளுக்கு ...இந்த நடமாடும் 
கடவுள்களை கண்டால் எரிச்சல் படுகின்றேன் ..எனக்கு பக்குவம் வந்து விட்டது ,
இப்போது நான் ஒரு வீட்டு உரிமையாளியாக வெங்கிட்டு அம்மாவை பார்கவில்லை 
நம் பக்கத்தில் இருபவருக்கு எரிச்சல் படாமல் கடவுளுக்கு செய்வது போல பக்தியையும் 
அன்பையும் செலுத்தினால் போன உயிர் கூட திரும்பி வந்து விடும் , ஆனந்தம் ,நிம்மதி 
நிரந்தரமாய் தங்கிவிடும் ..வேங்கட்டம்மா ...வேங்குடுவை அனுப்புங்க பால் பாயசம் அனுப்பி வைக்கிறேன் ......இல்லைம்மா ...நானே கொடுதுட்டு வெங்கட்டுக்கு சாக்லேட்  பாக்ஸ் தந்திட்டு வந்திரேன்..வெறுத்த உறவை புதிப்பிக்கும் நிகழ்வுகளின் ஆச்சரியம் 
எனக்கு புரிபடவில்லை ..."காக்க ..காக்க ..கனகவேல் காக்க ..நோக்க ..நோக்க நொடியினில் நோக்க "
-ஷஷ்டி கவசம் படிக்க,படிக்க முருகன் வடிவில் வேங்கிட்டமாவே தெரிகின்றாள் !. 

                கதை 
-என். நவ சதீஷ் குமார் ,
மதுரை .