Pages

Friday, February 18, 2011

navasathishstories: sea sound

navasathishstories: sea sound: " அலை ஓசை 'ஆர்பரிக்கும் கடல் அலைகளை பார்க்கும் ப..."

sea sound






                       அலை ஓசை 

"ஆர்பரிக்கும் கடல் அலைகளை பார்க்கும் போது
சிலருக்கு தோன்றும் அது மகிழ்ச்சியில் கரை வருகின்றது என்று 
சுருண்டு ஒன்றோடு ஒன்று கரைக்கு வருகையில் 
அவற்றில் ஒரு போராட்டம் நிகழும் 
யார் கரையில் மண்ணோடு , மண்ணாக மக்கி 
இறக்கபோகின்றோம் ...பயத்தோடு படபடப்பில்
சில அலை துளிகள் பாறைகளிலும் , சில மணலிலும் ,
நம் காலடியிலும் உயிர் துறக்க ..உறவுகளை இழந்த சோகமும்
உயிர் தப்பிய சந்தோஷத்தில் எழுப்பும் அலைகளின் 
ஒலியே அலைஓசை! ,"

கவிதை 
மதுரை என், நவ சதீஷ் குமார் .



Saturday, February 5, 2011

venkittamma-short story



வேங்கிட்டம்மா 

வேங்கிட்டம்மா ... என் வீட்டு மாடியில் வாடகைக்கு இருக்கும் ஒரு  நச்சு ...ஒரே 
பையன், பேரு வெங்கடேஸ்வரன் ...எட்டு வயசு ...மாடியில் ஓடுவதும் , ஆடுவதும் ..என்னால் சகித்து கொள்ள முடியவில்லை இதில் . 
"மாமி..கொஞ்சம் சீனி கிடைக்கும்மா ?'-சரியாக ஒரு சின்ன டம்ளரில் அளவுக்கு கடன் கேட்பாள்... திருப்பி தரும்போது அதே டம்ளரில் அளவை குறைத்து கொடுப்பாள் ! ச்சே ...என்னத்தை சொல்ல ...இல்லை வேங்கிட்டம்மா ...வாய் வரை வரும் சொல்ல ,இருந்தாலும் கோபத்தை அடக்கி கொண்டு ..சீனி கொடுத்து விடுவேன் .


வேங்கிட்டம்மா வின்  ..அண்ணன்  மிலிடரி மென் ...பார்க்க கம்பீரம் என்று சொல்ல மாட்டேன் .ஆனால் ஒரு வீரதிற்குள் நல்ல அடக்கம் இருக்கும் ...மாமி.....நமஸ்காரம் ...என் தங்கச்சி லக்ஷ்மியை பார்த்துகங்க ...காதல் கல்யாணம் பண்ணினது அப்பாக்கு பிடிக்கலை ,நாங்க educated family ..இவ புருஷன் நல்லவன் தான் யாரும் ஆதரவு தரமாட்டேன்கறாங்க  ...பிழைக்க ரொம்ப கஷ்டப்படறான் மாமி ,..சம்பாதிக்க கேரளாவுக்கு ,போய் , கிராநைட் வெட்டி எடுக்கும் வேலை . தங்குமிடம் கூடாரம் ,.
கூடாரத்தில் என் தங்கச்சியை பார்க்க என் மனசு கேட்கவில்லை மாமி ..அவன் வரப்ப வரட்டும் ...வாடகை என் பொறுப்பு ..இந்தாங்க 11 மாச அக்ரிமென்ட் , 5 மாச அட்வான்ஸ் 
பேச்சு மாறாமல் மாதா , மாதம் பணம் என் அக்கவுண்டிற்கு கிரெடிட் ஆகி விடும் .


..மாமி ... எங்க மிலிடரி கேண்டீன்ல எல்லாமே விலை குறைவு மாமி ...நீங்க கேட்ட டிவி 4000 கம்மி,  மாமி ...நான் ஆர்டர் கொடுத்திர்றேன் ...அவன் தயவில் புதிய LED tv என் பெண்ணிற்கு வாங்கி கொடுத்து மருமகனின் மதிப்பை காப்பாற்றி கொண்டேன் . எல்லாம் விதி ... வேங்கிட்டம்மாவின் மிகப்பெரிய சப்போர்ட் அவள்  அண்ணன், ஒரு நாள்  மும்பை தாஜ் ஹோட்டல் அட்டாக் நடந்த பொழுது  ஹெலிகாப்டரில் இருந்து பாரசூட் வழி ஹோட்டலில் புகுந்தது தான் தெரியும் ...பிறகு வந்தது அவன் உருக்குலைந்த பிணம் மட்டுமே ! ௦௦௦  


வாழ்கையில் பிடிப்பில்லாமல் அழுது கிட்டத்தட்ட பைத்தியம் ஆகிவிடுபவளை ஆறுதல் சொல்ல நான் மட்டுமே ..கல் உடைத்த சிற்ரைப்புகள் , கொஞ்சம் பணம், மாதத்தில் ஒரு நாள் மனைவியை சந்திக்க வருவான் வெங்கிட்டு அப்பா ! சில சமயம் அவனை கண்டால்
எனக்கு கோவம் பொத்துகொண்டு வரும் .இஞ்சி கொஞ்சம் , வெள்ளை பூண்டு நாலு , 
தேவை பட்டால் தக்காளி எல்லாம் கடன் .....நாங்க என்னப்பா மளிகை கடையா 
நடத்துறோம்,இதில் மாமி வாடகை ஒரு வாரத்தில தரேன் என்று இழுத்தடிப்பு வேறு , என் மகள் "இன்னும் ஏனம்மா அந்த வாலு பையனையும், வக்கத்த புருசனையும் ,அழுவாச்சி 
பொம்பளையையும்...காலி பண்ண சொல்ல மாடேங்கேரே..இவருக்கு சென்னை தவிர ஹைதரா பாத் தான் transfer ..நல்ல குடித்தனமா வைக்க பாருங்கம்மா ..இல்ல நான் நல்லா   
அந்த  வெங்கிட்டு அம்மாவை நாக்க புடுங்கிற மாதிரி கேட்கட்டுமா?" -எனக்கு நிர்பந்தம் 
பலவிதம் .சரி ..இன்னைக்கு ..முடிவா சொல்ல வேண்டியது தான் ... எப்படி சொல்லுவது ...ஒரே குழப்பம் ....கொஞ்சம் ஆயாசமாய் சோபாவில் அமர ,..நீண்டநாளாய் இருந்த வலி திடிரென்று .இடுப்பில் சுருகென்று ஆரம்பித்து வலிக்க துவங்கியது  ...பிறகு மெல்ல பரவ,பரவ  ஐயோ ..அம்மா ... அலறல் என்னை அறியாமல் ... ஓடி வந்தாள் வேங்கிட்டம்மா ..மாமி...மாமி ... 108 ஆம்புலன்ஸ் சைரன் சப்தம் ..அருகில் வேங்கிட்டம்மா ...மயக்கத்திலும் அவள் படபடப்பை என்னால் பார்க்க முடிந்தது . 
                     " யாருமா நீங்க "--டாக்டர் கேட்பதும்...இல்லைம்மா இவங்களுக்கு ஒரு கிட்னி யாரவது கொடுத்தாதான் காப்பாத்த முடியும் ...இவங்க மக கிட்ட பேசியாச்சு ...husband  hydreabad  இல் இருக்காராம் , கன்சல் பண்ணிட்டு flight  பிடிச்சு வரங்கலாம்..என்க்கு இது urgent  கேஸ் , வயசானவங்க வேற , கிட்னி donate  பண்ணுறவங்களை தேடிட்டு 
இருக்கோம் ,விளம்பரம் கொடுத்தாச்சு ..இன்னும் யாரும் வரலை ...அவங்க மகள் வர வரைக்கும் நீங்க இருங்க..நர்ஸ் ...வாங்க ஊசி , மருந்து , மாத்திரை எல்லாம் எழுதி கொடுத்தார் .
"டாக்டர் சார் ...ஒரு நிமிஷம் சார், இவங்க எனக்கும் அம்மா மாதிரி தான் சார் ... எனக்கு  அரைகுறை மயக்கம் இருந்தாலும் வேங்கட்டம்மா வின் குரல் எனக்கு கேட்டது ...சார் ..healthy body இருக்கறவங்க கிட்னி donate பண்ணலாம்னு கேள்வி பட்டு இருக்கேன் ...எனக்கு இல்லாதப்ப இந்த அம்மா, அன்ன தானம் மாதிரி கேட்கறப்ப எல்லாம் கடனா கொடுத்திருக்காங்க ..அந்த கடன் இந்த உடம்புல இருக்கிதால..அம்மாவுக்கு நான் கிட்னி தரேன் டாக்டர் ... "- பக்கத்தில் அழுக்கு கணவன் ஆமோதிப்பதும் தெரிய வர ..மயக்கத்திலும் என் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது.

அகற்றிய கிட்னி எனக்கு பொருத்தப்பட்டது ,யாரை நான் விரோதியாய் விரட்ட நினைத்தேனோ , அவள் இப்போது என் உயிர் காத்த கடவுள் , பாலும் ,தெளி தேனும்  , ,பாகும் , பருப்பும் இவை நான்கும் கலந்து...நான் தினமும் பாடும் பாடலின் வரிகள், வெள்ளிகிழமை சாம்பார் அதை மறக்காமல் காக்கைக்கு வைத்து உண்ணுவது என் குணம் , இது போலி தானே .. வேங்கட்டம்மா என்ன கேட்டாள்? இந்த உதவியை தானே ..?உண்டியலில் பணம் சேர்கின்றேன் கடவுளுக்கு ...இந்த நடமாடும் 
கடவுள்களை கண்டால் எரிச்சல் படுகின்றேன் ..எனக்கு பக்குவம் வந்து விட்டது ,
இப்போது நான் ஒரு வீட்டு உரிமையாளியாக வெங்கிட்டு அம்மாவை பார்கவில்லை 
நம் பக்கத்தில் இருபவருக்கு எரிச்சல் படாமல் கடவுளுக்கு செய்வது போல பக்தியையும் 
அன்பையும் செலுத்தினால் போன உயிர் கூட திரும்பி வந்து விடும் , ஆனந்தம் ,நிம்மதி 
நிரந்தரமாய் தங்கிவிடும் ..வேங்கட்டம்மா ...வேங்குடுவை அனுப்புங்க பால் பாயசம் அனுப்பி வைக்கிறேன் ......இல்லைம்மா ...நானே கொடுதுட்டு வெங்கட்டுக்கு சாக்லேட்  பாக்ஸ் தந்திட்டு வந்திரேன்..வெறுத்த உறவை புதிப்பிக்கும் நிகழ்வுகளின் ஆச்சரியம் 
எனக்கு புரிபடவில்லை ..."காக்க ..காக்க ..கனகவேல் காக்க ..நோக்க ..நோக்க நொடியினில் நோக்க "
-ஷஷ்டி கவசம் படிக்க,படிக்க முருகன் வடிவில் வேங்கிட்டமாவே தெரிகின்றாள் !. 

                கதை 
-என். நவ சதீஷ் குமார் ,
மதுரை .





Sunday, January 23, 2011

MG Ramachandran @ MGR

றைந்த முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சர் திரு. mgr அவர்களை பற்றி சில துளிகள் 
திரையுலகில் தடம் பதிக்க 11 ஆண்டுகள் கடுமையான போரட்டங்கள்ளுக்கு பிறகு இடம் பிடித்தவர் .
1917 ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்தவர் mgr .நடிப்பு துறையில் சாதித்த பின்பு தான் திருமணம் என்று mgr கூறினாலும் தாயாரின் பிடிவாதத்தால் பாலக்காட்டை சேர்ந்த பாலாமணியை திருமணம் செய்து கொண்டார் . தீடிரென்று ஒரு நாள் மனைவி இறக்க 
துக்கம் தாளாமல் ஒரு துறவி போல வாழ்ந்தார் ,பிறகு தாயார் ஆறுதல் கூற சதானந்தவதி 
என்ற பெண்ணை மறு மணம் செய்தார் . முதல் கருவுற்ற சதானந்தவதிக்கு காச நோய் மறைந்தார் . பிறகு 20   ஆண்டு காலம் இல்லற துறவியாக இருந்தார் . 
பின்னணி பாடும் கால கட்டம் இல்லாத நிலையில் ,குரல் வளம் மிக்கவகர்கள் மட்டுமே 
கதாநாயகனாக நடிக்க முடியும் , அழகும் , திறமையும் உள்ள mgr  அவர்கள் இந்த கால கட்டத்தில் முன்னேற முடியவில்லை . 1946  -ல் பின்னணி சேர்க்கும் முறை சினிமா துறையில்  கண்டுபிடிக்கப்பட mgr  வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது . 
அடேய் ..அப்பா ... ஒரு மனிதனுக்குள்  இத்தனை சோதனைகளா?
இதையெல்லாம் தாண்டி இன் செய்த பேன்ட் , ஷர்ட் , தொப்பி , tie  அணிந்து மஞ்சுளா , 
லதா , பானுமதி , ஜெய லலிதா ...இத்தனை நடிகைகள்ளோடு ஆடி , பாடி நடித்து , நம்மை மகிழ்வித்தவர் mgr . தெரியாத அரசியலில் புகுந்து தமிழகத்தின் முதல்வர் ஆனவர் .
அவரின் நினைவு தினம் januvary 17 வருடம் , வருடம் நினைப்போம் அரசியல் சின்னமாக அல்ல ... துயரங்கள் சூழ்ந்த போதும் சாதிக்கும் மனிதராக நாம் நிலைக்க வேண்டும் 
என்பதன் அடையாளமாக !
-கட்டுரை 
என். நவ சதீஷ் குமார் 
மதுரை




www.navasathish.blogspot.com



Friday, January 21, 2011

go ahead without barrier -mind blowing article

 ஓடும் வரை ஓடலாம் --வாருங்கள் 
என். நவ சதீஷ் குமார்  
ப்போதும் கடும் போராட்டம் , உயர , உயர மனிதனுக்கு மட்டும் சவால்கள் , எதிரிகளை சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற பயம், பணம் சேர்க்க வேண்டும் அதனை உடன் சேர்க்கவேண்டும்ஓட , ஓட விரட்டும் மனம் ...வேண்டுதல்,ஜெபம் , பிரார்த்தனை இவைகள் எல்லாம் நமது சிந்தனைகளை சிறிது கட்டு படுத்த , ஆனால் இந்த காலத்தில் சுய நலம் மிக்கதாய் மாறி விட்ட தால், கிடா வெட்டி பொங்கல் வைத்து குடும்ப பிரச்சனை ,பண
 பிரச்சனை க்கு தீர்வு காணும் பாமரன் போல கம்ப்யூட்டர் படித்தவனும் மாறிவிட்டான்.


தீவிரவாதீகள் , கொலைகாரர்கள் , பெண் பித்தர்கள் , குடிகாரர்கள் இன்னும் சொல்ல கூசும் மனிதர்களை படைத்தது என்னை பொறுத்தவரை இறைவனின் புத்தி சாலி தனமே !
இறைவன்மேல் என்க்கு நம்பிக்கை இல்லை ஆனால் சிறு புழு முதல் புலி வரை சரியாக
ஜோடி சேர்க்க வைத்து  உணவு வகைகளை வகை படுத்தி அவைகளை உண்ண ஒரு டீமே
எங்கோ செயல் பட்டு கொண்டிருகின்றது அவர்கள் கண்ணில் இன்னும் படவில்லை..
ஆகவே நான் அவர்களை கடவுளாகவே பார்கின்றேன் .முதலில் நான் சொன்னேன்
இறைவன் , இழி பிறப்புகளை படித்ததில் கூட அவனின் புத்தி சாலி தனம் தான்.
உலகில் பெரும் பணக்காரர்கள் ,சாதனை மெடல் வாங்கியவர்கள் எல்லாம் மரணம் அடைந்தவுடன்  அவருக்கு வழங்கப்படும் பெயர் சவம்.
நமக்கு சிறு நீர் வருகின்றது அதை அடக்க முடிந்தால் எத்தனை துயரம் ?
அது போல தான் நமது உடல் உயிர் பிரிந்த பின் துன்பப்படுகின்றது ,,ஆகவே நான்
நினைக்கின்றேன் மரணம் கூட ஒரு வித கழிவு தான் என்று . அந்த கழிவு நம் உடலில் இருந்து அகற்றப்படும் போது நிச்சயம் ஆனந்தப்படும் ..இன்னும் யோசிக்கிறேன் ...அந்த மனித உடல் புதைக்கப்படும் போதோ , எரியூட்டப்படும் போதோ சுகம் , இன்னும் கூடும்!
அத்தனை புலன்களையும்  இன்பப்படுத்தும் மரணமே உன்னை வரவேற்கின்றேன் .
உயிர்ரற்ற உடலை கண்ணாடி ஐஸ் பெட்டியில் வைத்து உறவினர் வருகைக்காக காக்கும் போதும், போலீஸ் காரர்கள் விசாரணைக்காக பாதி அழுகிய நிலையில் நிலம் தோண்டும் போதும் உறக்கம் கலைப்பது போன்ற எரிச்சல் ..நான் தான் தேவை இல்லை ..என்னை ஏன் வாட்டி வதைகின்றீர்கள் ...கேட்க  உதடுகள் இல்லை...கேட்ப்பாரும் யாரும் இல்லை ..இது நான் செய்த பாவமா? ..ஒன்று மட்டும் தெரிகின்றது சுவடே இல்லாமல் அழியும் போது தான் உயிருக்கு விடுதலை , அப்பொழுது தான் ஆனந்த சுகம் கிடைக்கும் . 


போட்டிகள், பொறாமைகள் , இன்ப , துன்பங்கள் எல்லாம் நம்மை மேம்படுதுவையே   சிரமங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்றால் அனைத்தையும் சமாளிக்கும் பொறுமை வேண்டும் . "இல்லை " என்று எண்ணி ஏங்குவதை விட "ஏன் நம்மிடம் இல்லை " என்று எண்ணி அதனை "உண்டு" என்னும் செயலாக்கி காட்ட வேண்டும் ..பணம் இல்லை .. நீர் இல்லை ..என புலம்பாமல் அதனை உருவாக்க வேண்டும் .அதுவே நாம் இன்பமாக வாழ வழி வகுக்கும்.
சாக்கடையில் ஓடுவதும் நீர் தான் அது நாற்றம் எடுக்கின்றது .ஆற்றில் ஓடுவதும் நீர் தான்.. அதனை பருக முடிகின்றது .எனவே எது தங்கினாலும் அது நாற்றமே . அகவே வாழ்கையில் நாம் தேடுதலை நோக்கி ஒடிகொன்டே இருக்க வேண்டும் .
என்னிடம் ஒருவர் அரசு வேலையில் சேர்ந்ததை பெருமையாக எண்ணி கொண்டு என் மாத சம்பளம் இருபத்தைந்தது ஆயிரம் சம்பளம் , கிம்பளம் பாதி வேலை அதிகமும்  கிடையாது எல்லாம் என் எம் ஆர் பசங்க பார்த்துபாங்க உங்களுக்கு பிசினெஸ் நிரந்தரம் இல்லைல்ல சார் , மாசா...மாசம் இவ்வளவு வரன்னும் ...அவர் பேசுவதை மட்டம் தட்டுவதும , அகந்தையும் வெளிப்பட்டது , அவரை நான் ஒரு புண் முறுவலோடு பார்த்தேன் ..௦௦௦  திடீரெண்டு ஒரு நாள் அவரை ஒரு ஹோட்டலில் பார்த்தேன் ...
கையில் கோப்பை ...பீர் , வோட்கா , விஸ்கி , கலந்தடித்து புல் போதையில் இருந்தார் .
போதை இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு ஓடி வந்தார் ... சார் ... இந்த அரசாங்கமே மோசம் சார் ... மூணு வருஷம் அக்கடான்னு இருந்தேன் இப்ப ஆட்குறைப்பு , கட்டாயம் கம்ப்யூட்டர் பழகனும் , ஜூனியர் பசங்க ஐ .எ. எஸ் முடிச்சிட்டு ஆர்டர் போடுறானுங்க , சட்டம் பேசுறானுங்க ..டார்ச்சர் தாங்க முடியலே சார் .பேசாமே வீஆர்எஸ் வாங்கிட்டு உங்களை போல சுய தொழில் செய்ய போறேன் சார் .. என்றார் ..நான் சிரித்தேன் ..சார் உங்களுக்கு "ரிஸ்க் " எடுக்கும் மனோபாவம் இல்லை அது வராது ,
விடுமுறை வந்தால் வீட்டில் டிவி முன் அமர்ந்து பட்டி மன்றம் , மான் ஆட மயில் ஆட ,
நாயா? பேயா? , கதை அல்ல கன்றாவி , அப்புதாவை பழி வாங்கும் அதிசய ஆண்டி வைரஸ் ..உங்கள் மூன் டிவீயில் பார்க்க வேண்டும .. அதற்க்கு விளம்பரம் வாங்கி தரும் பணியில் இருப்பவன் கூட இதனை பார்க்க மாட்டான் , அவன் காசு பார்பான் ...ஆகவே நீங்கள் உங்கள் mind  செட் மாறாமல் எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்றேன்.
யோசித்தார் ..என்னை பொறமை பிடித்தவன் என்று எண்ணி இருப்பார் போலும் 
"இரண்டு நாளில் பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் " - ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு சென்றார் , "டே trading  , கம்மாடிட்டி trading  " பயிற்சி எடுத்தார் ..
ஆசை யாரை விட்டது ..தொடர்ந்த நஷ்ட்டம் . தேங்கிய வேலை தேகத்திருக்கு சுகம் கொடுக்கும் ஆனால் மனதிற்கு வளர்ச்சியை கொடுக்காது...விரைவில் தேக்கம் நம்மை முழ்கடித்து விடும் .
நீங்கள் பாருங்கள் .. தேங்கிய எண்ணங்கள் தொழில் அதிபர்களை உருவாக்குவதில்லை .
மேலாண்மையில்  தேங்கியவர் மேலாளர், கணக்கியலில் தேங்கியவர் கணக்காளர் , கம்ப்யூட்டர் இல் தேங்கியவர் ப்ரோக்ராமர் , அரசியலில் தேங்கியவர் தொண்டர் , கட்சியை புதுமைகளை புகுத்தி , எதிரிகளை ஓட விரட்ட சதா சிந்திக்கும் தேங்காத எண்ணங்களை கொண்டு கட்சியை வளர்பர்வர்கள் மட்டுமே முதல்வர்கள் !ஆகவே 
வாழ்கையில் முன்னேற என்றைக்கும் வேண்டாம் எதிலும் தேக்கம்.!
கட்டுரை 
-என் .நவ சதீஷ் குமார் .
16  ரயிலார் நகர் , மதுரை .
தமிழ் நாடு


 உங்களது ஊடகங்களில் இந்த கட்டுரையை இணைக்க , ஓளி , ஒலி செய்ய உங்களால்
இயன்ற தொகையை கீழ் கண்ட வங்கி கணக்கில் ஆன் லைன் மூலமாக செலுத்தல்லாம்


வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் கணக்கு எண்: 312  டைப்: sb ac        Branch  : koodal nagar 
மதுரை .


விளம்பரங்கள் வெளியிட கால் பக்கம் மாதம் 3000 /= inr மட்டுமே !
ஆபாச படங்கள் , அதுகுறித்த அறிவிப்புகள் வெளியிட அனுமதி இல்லை .
-நன்றி -
௦௦௦௦௦



படங்கள் : திரு : பொள்ளாச்சி மகாலிங்கம் மற்றும் முதல்வர் 
                    திரு; அணில் அம்பானி , முகேஷ் அம்பானி 
                     திரு : பில் கேட்ஸ் .
                     திரு : அத்வானி மற்றும் ஜெ.ஜெயலலிதா 


குறிப்பு : அரசியல் , விருப்பு வெறுப்புகள் இல்லாமல் படம் இணைக்க பட்டுள்ளது